எது வேண்டுமானாலும் தியானமாக மாறலாம்!

ஓஷோ :

எது வேண்டுமானாலும் தியானமாக மாறலாம்!

உங்கள் அறையின் ஏதாவது ஒரு மூலையில் நில்லுங்கள்.

அந்த அறையின் மூலையில், எதுவும் செய்யாமல், அமைதியாக நிற்கவும். அப்போது திடீரென்று உங்களுக்குள் ஒரு ஆற்றல் உயருவதை காண்பீர்கள். ஆனால் நீங்கள் உட்கார்ந்திருக்கும்போதோ மனதில் பல வகையான தொந்தரவுகளை மட்டும்தான் உணர்வீர்கள். ஏனென்றால் நீங்கள் உட்கார்ந்திருக்கும் நிலையானது ஒரு சிந்தனையாளரின் தோரணையாகும். ஆனால் நிற்கும்போதோ ஆற்றலானது ஒரு நெடுவரிசையைப் போல மேல பாய்கிறது. மேலும் அது உடல் முழுவதும் சமமாக பாய்கிறது. எழுந்து நிற்பது ஒரு அழகான அனுபவம்.

எனவே அதை முயற்சித்து பாருங்கள். ஏனென்றால் உங்களில் பலர் அதை கண்டிப்பாக நேசிப்பீர்கள். நீங்கள் ஒரு மணி நேரம் அமைதியாக நிற்க முயற்சி செய்து பாருங்கள். உங்களில் பலர் அதை விரும்புவார்கள். ஒரு மணி நேரம் அமைதியாக ஒரு அறையின் மூலையில் நின்றால் போதும். உடனே ஒருவித அமைதி உங்களைச் சூழ்ந்து கொள்ளும். எதுவும் செய்யாமல் அப்படியே நிற்பதன் மூலம், உங்களுக்குள் ஏதோ ஒன்று நின்று, அமைதியாகி, ஒரு ஆற்றல் தூணாக நீங்கள் மாறுவதை அப்போது உணர்வீர்கள். அப்போது நீங்கள் உங்கள் உடலை காணமாட்டீர்கள்.

ஓஷோ – ஆரஞ்சு புத்தகம்

உங்கள் அவமானத்திற்கு அடுத்தவர் காரணம் அல்ல

ஒரு மனிதர் ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்து மிகவும் கோபமாக கத்தினார். இங்கு என் மனைவி உணவு வாங்க வரும் பொழுது யார் அவளை மோசமாக திட்டியது.

மிகவும் உயரமான ஒரு பலசாலியான ஒருவன் எழுந்து நின்று சொன்னான் நான்தான் உன் மனைவியை திட்டினேன் அதற்கு இப்பொழுது என்ன என்றான்.

இவர் சொன்னார் ஆமாம் நீ திட்டியது சரிதான் அதுதான் என்னுடைய கருத்தும் என்று அவனிடம் சொல்லிவிட்டு அவமானத்துடன் வெளியேறிவிட்டார்.

உங்கள் அவமானத்திற்கு அடுத்தவர் காரணம் அல்ல.நீங்களே காரணம்.உங்கள் காயத்தை நீங்களே சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

யாருக்கும் உங்களை வேதனைப்படுத்த விருப்பமில்லை.யாரும் உங்களை அவமானப் படுத்த விரும்புவதில்லை.

நீங்களே உங்கள் காயத்தை பாதுகாத்துக்கொள்ள மும்முரமாய் இருக்கிறீர்கள்.

அடுத்தவர் அவமானப்படுத்துவதற்கு முன்பே நீங்கள் அவமானப்படுவதற்கு தயாராக இருக்கிறீர்கள். நீங்களே காரணம்.

கொஞ்சம் இறந்த காலத்திற்கு திரும்பிச் சென்று பாருங்கள் உங்கள் ஆசிரியர் உங்களை முட்டாள் என்று அழைத்து இருப்பார்.

உங்கள் தந்தை ஏதாவது சொல்லி இருப்பார்.

உங்கள் நண்பர்களிடம் ஏதாவது அவமானம் நிகழ்ந்திருக்கலாம்.

ஆனால் அவர்களே அதையெல்லாம் மறந்து இருப்பார்கள் ஆனால் நீங்கள் அதை ஞாபகத்தில் வைத்திருபீர்கள்.

உங்கள் காயத்தை புரையோட விட்டிருக்கிறீர்கள்.

நான் சொல்கிறேன் உங்கள் காயத்தை பற்றி விழிப்போடு இருங்கள். அதை குணமாக விடுங்கள். யாராவது உங்களை அவமரியாதை செய்கிறார்கள் என்பது இல்லை. நீங்கள் அவமானமாய் உணர்கிறீர்கள் என்பதுதான் உண்மை.

உடனே எப்படி பழிவாங்குவது என்று யோசிக்க தொடங்குகிறீர்கள்.

அந்த மனிதன் உங்களை கைப்பற்றி விட்டான்.

இப்போது நீங்கள் சுற்றி சுற்றி வருகிறீர்கள் நாள் கணக்காக, பல இரவுகளாக, பல மாதங்களாக, பல வருடங்களாக கூட உங்களால் தூங்க முடியாது.

உங்களுக்கு கெட்ட கனவுகள் வரும்.

மக்கள் சிறிய விஷயங்களுக்காக முழு வாழ்க்கையுமே வீணடிக்கிறார்கள். மற்றவர்கள் அவமரியாதை செய்து விட்டார் என்ற ஒரே காரணத்துக்காக. உங்கள் காயத்தை சுமந்து கொண்டிருக்கிறீர்கள்.

இருபத்தி நான்கு மணி நேரம் போதும். யாராவது உங்களை அவமரியாதை செய்தால் ஏற்றுக்கொள்ளுங்கள்.பதிலுக்கு ஒன்றும் செய்யாதீர்கள் என்ன நிகழ்கிறது என்று பாருங்கள்.

உடனே நீங்கள் இது வரை உணர்ந்திராத சக்தி உங்கள் மேல் பொழிவதை உணர்வீர்கள்.

காயத்தை வளர விடாதீர்கள். அதை புரையோட அனுமதிக்காதீர்கள்.

யாராவது உங்களை மண்ணில் தள்ளிவிட்டால் விழுங்கள் பிறகு எழுந்து வீட்டுக்குச் செல்லுங்கள்.

இருபத்தி நான்கு மணி நேரங்கள் மட்டுமே போதும் பதிலுக்கு எதுவும் செய்ய முயற்சிக்காதீர்கள் என்ன நிகழ்ந்தாலும்.

யாராவது உங்களை குட்டினால் தலையை குனிந்து நன்றியோடு ஏற்றுக்கொள்ளுங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். எதுவுமே செய்யாதீர்கள் 24 மணி நேரங்களுக்கு மட்டும் போதும்.பிறகு இதற்கு முன் உணர்ந்திராத ஒரு சக்தி உங்களுக்குள் எழுவதை பார்ப்பீர்கள்.

வேரிலிருந்து ஒரு புதிய புத்துணர்ச்சி எழும்பும்.

ஒருமுறை நீங்கள் தெரிந்துகொண்டால் அதை சுவைத்து விட்டால் உங்கள் வாழ்க்கை மாறுபடும். பிறகு நீங்கள் செய்துகொண்டிருக்கும் முட்டாள்தனங்களை பார்த்து சிரிப்பீர்கள்.

எல்லா வருத்தங்களையும் , எதிர்பார்ப்புகளையும் கொண்டு உங்களை நீங்களே அழித்துக் கொண்டிருப்பதை பார்த்து சிரிப்பீர்கள்.

எல்லாமே நீங்கள்தான்.

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை அழிக்க முடியாது.

உங்களைத் தவிர வேறு யாராலும் உங்களை காப்பாற்ற முடியாது.

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு விட்டால் பிறகு நீங்கள் தான் யூதாஸ். நீங்கள் தான் இயேசு.

__ஓஷோ.

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

மாணவன் எப்படி இருக்க வேண்டும்?
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
சாக்ரடீஸிடம் அவருடைய‌ மாணவன் ஒருவன் வந்தான். ”ஐயா, மாணவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள் ஐயா” என்றான்.

அதற்கு சாக்ரடீஸ் ”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.

”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.

”கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.

அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி விட்டு, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.

அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…” என்று கேட்டான்.

“ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.

அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.

”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.

”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.
🙏🏾🙏🏾🌹🌹🌹🙏🏾🙏🏾
அந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்.
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽
கிரேக்க தத்துவமேதையான சாக்ரடீஸ் கூறிய மாணவன் எப்படி இருக்க வேண்டும்? என்பதை அறிந்து கொண்டீர்களா.
🌹✍🏽🌹✍🏽🌹✍🏽🌹✍🏽
இன்றைய மாணவர்களே!
👆🏾👆🏾👆🏾👆🏾👆🏾
அறிவுரைகளை பின்பற்றி நடந்து கொள்ளுங்கள்.
வெற்றி உங்களை வந்து சேரும்
மாதா பிதா குரு தெய்வம்
ஆசிரியர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
🙏🏾🙏🏾🌹🌹🌹🌹🙏🏾🙏🏾