பன்றிமயக் கோட்பாடு !!!.

பன்றிமயக் கோட்பாடு !!!.

GPF கேட்டு போராடியவனுக்கு அகவிலைப்படியும் மறுக்கப் பட்டது !!!.

ஒரு அநியாயக்கார அரசன் ஒருவன் ஒரு அப்பாவிக் குடிமகனைக் கைது செய்து மூன்று மீட்டர் மாத்திரமே பரப்பளவான ஒரு தனிச் சிறையில் அடைக்கும் படி கட்டளையிட்டான் !!!.

நிரபராதியான அந்த குடிமகன் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான் !!!. “நான் நிரபராதி, ஏன் என்னைக் கைது செய்தீர்கள் ?. ஏன் என்னைச் சிறையில் அடைத்தீர்கள் ?” என்று உரக்கக் கதறினான் !!!.

பின்னர் அவனை ஒரு மீட்டர் மாத்திரமே அளவுள்ள ஒரு தனிச் சிறையில் அடைக்கும் படி கட்டளை வந்தது !!!.

மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்தான் !!!. ஆனால் இம்முறை “நான் நிரபராதி” என்ற வாதத்தை மறந்து விட்டான் !!!. “இது என்ன கொடுமை !!!. இந்தச் சிறையில் எப்படி இருப்பது? உறங்குவது?அமர்ந்து கொண்டு தானே உறங்க முடியும் !இது உங்களுக்கே தப்பாகத் தெரியவில்லையா ?” எனக் கதறினான் !!!.

சினம் கொண்ட காவலர் இன்னும் நான்கு சிறைக் கைதிகளை அவனோடு சேர்த்து அந்தச் சிறிய கூட்டில் அடைத்து விட்டான் !!!.

இப்போது ஐந்து பேரும் இணைந்து கூக்குரலிட்டனர் !!!. “எங்களால் முடியாது !!!. நாங்கள் மூச்சுத் திணறி செத்து விடுவோம் !!!. உங்களுக்கு ஈவிரக்கம் எதுவும் இல்லையா ?” என புலம்பினார்கள் !!!.

மேலும் சினம் கொண்ட காவலர் ஒரு “பன்றியை” அவர்களோடு சிறையில் அடைத்து விட்டான் !!!.

விரக்தியடைந்த அவர்கள், “நாங்கள் இந்த அசிங்கத்தோடு இந்தச் சிறிய கூட்டில் எப்படி இருப்பது !!!. தயவு செய்து இந்த பன்றியை மாத்திரமாவது வெளியே எடுத்து விடுங்கள் ” எனக் கெஞ்சி கேட்டனர் !!!.

தயவு காட்டிய காவலர் “பன்றியை” வெளியே எடுத்தான் !!!.

அடுத்த நாள் அரசன் அந்தப் பக்கமாக வந்து “இப்போது உங்கள் நிலை எப்படி ?” என்று விசாரித்தான் !!!.

“நாங்கள் நல்ல சுகமாக இருக்கிறோம் !!!. எங்கள் பெரிய பிரச்சினை தீர்ந்து விட்டது” என்று பதில் கூறினார்கள் !!!.

இப்படித்தான் எமது நாடுகளில் “பன்றிமயக் கோட்பாடு” அமல் படுத்தப் படுகிறது !!!. “பன்றியை மாத்திரம் எடுத்து விட்டால் போதும்” என்ற கோரிக்கையில் ஆர்ப்பாட்டம் முடிந்து விடுகிறது !!!. அதற்கு முன்னால் இருந்த விவகாரம், அதற்கும் முன்னால் இருந்த மூல விவகாரம் எல்லாம் மறக்கடிக்கப் படுகிறது !!!.

புதுப்புது பிரச்சினைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர் !!!. முடிவில் பன்றி மய கோட்பாட்டை அவிழ்த்து விடுகின்றனர் !!!. பின்னர் நாம் அதிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, முதன்மைப் பிரச்சினைகளை நாமே மறந்து விடுகின்றோம் !!!.
மறக்க வைக்கப் படுகிறோம் !!!.

இது மறுக்க முடியாத யதார்த்தம் !!!.

“பட்டு வேட்டி (பழைய ஓய்வூதிய திட்டம்)கனவில் இருந்தவனிடமிருந்து,
கட்டியிருந்த கோவணமும் (சரண்விடுப்பு, அகவிலைப்படிஉயர்வு)உருவப்பட்டது !!!.”

படித்ததில் பிடித்தது….Attention pleaseபிரபஞ்சம் பேசுகிறேன்🌹🌹🌹🌹🌹🌹🌹🌹எந்த ஒன்றை நீ விரும்புகிறாயோ அதுவும் உன்னை விரும்புகிறதுவாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டுமோ? அதை நான் தருவதில்லை,நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் எதை அதிகமாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அந்த அதிர்வுகள் எனக்கு வருகிறது.அதையே பலமடங்காக திரும்பி தருகிறேன்எனவே நீங்கள் குறைகளை நினைத்து வாழ்ந்தால், உங்களுக்கு அதிக பற்றாக்குறையை தருவேன்.பயந்து வாழ்ந்தால், நீங்கள் பயப்பட கூடிய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.நீங்கள் அன்புடன் வாழ்ந்தால்,அன்பு கிடைக்கும் அதிக விஷயங்களை உங்களுக்குத் தருவேன்.நன்றியுணர்வுடன் வாழ்ந்தால், நன்றி சொல்ல இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.நீங்கள் புகாருடன் வாழ்ந்தால்,குறைகூற இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.நீங்கள் வலியில் கவனம் செலுத்தி வாழ்ந்தால், அதிக வலிகளைத் தரும் விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.எனவே உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லாதே.நீ எப்படி இருக்கிறாய் எது வேண்டும் எப்படி வாழவேண்டும் என்று உங்களது எண்ணத்திடம் சொல்லுங்கள்.திரும்ப திரும்ப சொல்லுங்கள் அது தான் உங்களுக்கு பல மடங்காக திரும்பி வரும்.நல்லது நினையுங்கள் நல்லதே நடக்கும்

பிரபஞ்சம் பேசுகிறேன்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

படித்ததில் பிடித்தது….

Attention please

எந்த ஒன்றை நீ விரும்புகிறாயோ அதுவும் உன்னை விரும்புகிறது

வாழ்க்கையில் உனக்கு என்ன வேண்டுமோ? அதை நான் தருவதில்லை,

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், மற்றும் நீங்கள் எதை அதிகமாக நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அந்த அதிர்வுகள் எனக்கு வருகிறது.

அதையே பலமடங்காக திரும்பி தருகிறேன்

எனவே நீங்கள் குறைகளை நினைத்து வாழ்ந்தால், உங்களுக்கு அதிக பற்றாக்குறையை தருவேன்.

பயந்து வாழ்ந்தால், நீங்கள் பயப்பட கூடிய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.

நீங்கள் அன்புடன் வாழ்ந்தால்,அன்பு கிடைக்கும் அதிக விஷயங்களை உங்களுக்குத் தருவேன்.

நன்றியுணர்வுடன் வாழ்ந்தால், நன்றி சொல்ல இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.

நீங்கள் புகாருடன் வாழ்ந்தால்,குறைகூற இன்னும் நிறைய விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.

நீங்கள் வலியில் கவனம் செலுத்தி வாழ்ந்தால், அதிக வலிகளைத் தரும் விஷயங்களை உங்களுக்குக் கொடுப்பேன்.

எனவே உங்களுக்கு என்ன வேண்டும் என்று என்னிடம் சொல்லாதே.

நீ எப்படி இருக்கிறாய் எது வேண்டும் எப்படி வாழவேண்டும் என்று உங்களது எண்ணத்திடம் சொல்லுங்கள்.

திரும்ப திரும்ப சொல்லுங்கள் அது தான் உங்களுக்கு பல மடங்காக திரும்பி வரும்.

நல்லது நினையுங்கள் நல்லதே நடக்கும்

பொறுமையே வெற்றிக்கு வழி”

எடிசன் மின்சார பல்பை கண்டுபிடித்த பிறகு தன் நண்பர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் அந்த பல்பை ஒளிர வைத்து காட்டுவதற்காக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். அவரது ஆய்வகத்தின் மேல் தளத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

எடிசன் தனது உதவியாளரை அழைத்து மின்சார பல்பை மேல் தளத்திற்கு கொண்டு வரச் சொன்னார். அந்த உதவியாளர் பல்பை கொண்டு வருகையில் அது கை தவறி கீழே விழுந்து உடைந்துவிட்டது. அங்கிருந்த எல்லோரும் அதிர்ச்சி அடைந்தார்கள். உதவியாளரும் பதற்றம் அடைந்து விட்டார் ஆனால் எடிசனும் எந்த பதற்றமும் அடையவில்லை.

ஆயிரம் தோல்விகளை சந்தித்து மின்சார பல்பை உருவாக்கிய அவருக்கு மீண்டும் ஒரு மின்சார பல்பை உருவாக்குவது மிகவும் எளிதாக இருந்தது. சிறு முயற்சி செய்து மீண்டும் ஒரு பல்பை உருவாக்கினார். அதை மீண்டும் அதே உதவியாளரிடம் கொடுத்து மேலே கொண்டு வரச்செய்தார்.

பல்பை கீழே போட்டு உடைத்த அவரிடமே அதை மீண்டும் கொடுக்கிறீர்களே என்று சிலர் ஆச்சரியப்பட்டு எடிசனிடம் கேட்டார்கள்.

அந்த பல்ப் மீண்டும் உடைந்தாலும் என்னால் இன்னொரு பல்பை உருவாக்க முடியும். ஆனால் என்னுடைய உதவியாளரின் மனதை உடைத்து விட்டால் அதை என்னால் சரிசெய்ய முடியாது! அதனால் தான் மீண்டும் அவரிடம் அதே பணியை கொடுத்தேன். அவர் அவரது பணியையும், அவரது பொறுப்பையும் என்னுடைய நம்பிக்கையும் நன்றாக உணர்ந்து மீண்டும் வேலை செய்வார். என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என்றார் எடிசன்.

அப்போதுதான் எடிசனுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்த அந்த பொறுமையின் முக்கியத்துவத்தையும் அங்கிருந்த அனைவரும் உணர்ந்தார்கள்.

எடிசன் ஆயிரம் முறை தோல்வி கண்டு ஒரு மின்சார பல்பை கண்டுபிடித்தார். அந்த பல்பை தனது உதவியாளரின் கை தவறி விழுந்து உடைந்ததற்காக எடிசன் திகைக்கவில்லை. நொந்து போகவில்லை. அந்த அதிர்ச்சிகரமான நிமிடங்களில் கூட அமைதியாக நடந்து கொண்ட நேர்மறை சிந்தனை உள்ள ஒரு அற்புதமான மனிதர் எடிசன்.

“பொறுமையே வெற்றிக்கு வழி”

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்…

ஒருமுறை ஒரு கணவர் தன் மனைவியின் பிறந்தநாளன்று அவருக்கு அழகியதொரு காரை பரிசளித்தார்.

முதலில் கார் சாவிகளைக் கொடுத்தார். பின் அவரது மனைவியின் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் காரின் முக்கிய ஆவணங்களை ஒரு ஃபைலில் வைத்துக் கொடுத்தார். கொடுத்துவிட்டு அன்பாக ஒரு புன்சிரிப்பையும் கொடுத்தார்.

அன்றைய தினம் குழந்தைகளை தான் கவனித்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டு புதிய காரை ஓட்டிப் பார்த்து வருமாறு மனைவியை அனுப்புகின்றார்.

மனைவியும் நன்றி சொல்லிவிட்டு காரை எடுத்துக்கொண்டு புறப்படுகின்றார். ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் சென்றதுதான் தாமதம் காரை வேகமாக சாலையின் குறுக்குச் சுவற்றில் போய் இடிக்கின்றார். அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் காரின் முன்பகுதி மிகவும் பாதிக்கபட்டுவிடுகிறது. ‘கணவரிடம் என்ன சொல்வேன்?

‘நான் சொல்வதை அவர் எப்படி எடுத்துக் கொள்வார்?’ என்று மனதுக்குள் குற்ற உணர்வுடன் புலம்புகிறார். விபத்து நடந்த இடத்திற்கு போலீஸ் உடனடியாக வந்துவிட்டார்கள்.

‘உங்க டிரைவிங் லைசன்ஸ் ப்ளீஸ்!’ கேட்கிறார்கள் போலீஸார். நடுங்கிய கைகளுடன் தன் கணவர் கொடுத்த ஃபைலைத் திறக்கின்றார். கண்களிலிருந்து கண்ணீர் ஓடுகிறது. ஃபைலைத் திறந்தவுடன் உள்ளே கணவரின் கையெழுத்துடன் ஒரு துண்டுச்சீட்டு இருந்தது: ‘அன்பே, ஏதாவது விபத்து நேர்ந்து விட்டால், ஒன்றை மட்டும் மறந்துவிடாதே. நான் அன்பு செய்வது உன்னை. காரை அல்ல. அன்புடன், ஹென்றி.’

மனிதர்களை அன்பு செய்யவும் பொருள்களை பயன்படுத்தவும் வேண்டும். பொருள்களை அன்பு செய்து மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என்று கற்றுக்கொண்டோர் பேறுபெற்றோர்.

காரில் ஏற்படுகின்ற ஒரு கோடு நமது இரத்த அழுத்தத்தை உயர்த்துகிற அளவிற்கு பல நேரங்களில் நமது மனத்தில் இருக்கின்ற கோட்டை நாம் கண்டுகொள்வதில்லை.

ஒருவர் ஒருநாள் தான் வைத்திருந்த 18 ஆண்டுகள் பழமையான கண்ணாடி தாஜ்மஹால் ஒன்றை வேண்டுமென்று கீழே போட்டு உடைக்கின்றார். அதைப் பார்த்தவர்கள், ‘ஐயோ, ஏன் இப்படிச் செய்றீங்க?’ என்று கேட்டபோது

அவர் சொல்கின்றார்: ’18 வருடங்களாக கீழே விழுந்துவிடுமோ, உடைந்துவிடுமோ என இது எனக்கு பலமுறை டென்ஷன் தந்தது. நான் இன்றுதான் முடிவெடுத்தேன், என்னை ஆளப்பிறந்து அல்ல இது, நான்தான் இதை ஆளப்பிறந்தவன். உடைத்தேன். நிம்மதியாயிருக்கின்றேன்’.

மற்றொரு நபர் தான் புதிதாக வாங்கிய மெர்சிடெஸ் பென்ஸ் கார் விபத்தில் ஒன்றுமில்லாமல் ஆனபோது தன் நண்பர்களையெல்லாம் அழைத்து விருந்து கொடுத்தாராம். விருந்திற்கு முன் அவர் சொன்னது: ‘கார் முழுவதும் உடைந்து போனாலும் உள்ளேயிருந்த எனக்கு ஒன்றும் ஆகவில்லை. நான் நன்றாக இருப்பதால் என்னால் இன்னொரு கார் வாங்க முடியும். ஆனால் கார் நன்றாக இருந்து நான் இல்லாமல் போயிருந்தால் எப்படியிருக்கும்?’

நமது வாழ்க்கையை நாம் சிறுவயதில் தொடங்கும்போது வெறும் 60 ரூபாய் பொம்மை காரோடு தொடங்கினோம். அது உடைந்தபோது நாம் அழுதோம். அதிலிருந்து கொஞ்சம் வளர்ந்து 2000 ரூபாய்க்கு கார் ரிமோட்-கண்ட்ரோல் கார் வாங்கினோம். அது உடைந்தபோதும் நாம் அழுதோம். இன்னும் கொஞ்சம் வளர்ந்தபின் நமது பிறந்தநாளுக்கு 20000 ரூபாய் மதிப்புள்ள பேட்டரியில் இயங்குகின்ற கார் நமக்கு பரிசாகக் கிடைத்தது. அது ஒருநாள் பழுதானபோது நாம் ரொம்பவே நொந்து போனோம். அதற்கு பிற்பாடு 4 இலட்சம், 22 இலட்சம், 86 இலட்சம் என்று கார் வந்தாலும், அதில் ஒரு கிறுக்கல் ஏற்பட்டாலோ, பெயின்ட் உரிந்தாலோ, லைட் உடைந்தாலோ, கண்ணாடியில் கறைபட்டாலோ, உள்புறம் ஏதோ சிந்தினாலோ என்று நமது கவலைகளின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் இருந்தது.

நமது பொம்மையின் மதிப்பு வளர்ந்தது. ஆனால், நாம் வளரவில்லை. நாம் எதற்காக அழுதோமோ, அது மாறிவிட்டது. ஆனால் நமது அழுகையும், கண்ணீரும் மாறவில்லை.

நமது அழுகைக்கு நாம் கோபம், ஏமாற்றம், விரக்தி, அழுத்தம், கவலை என மேன்மையான பெயர்களையும் சூட்டிக் கொண்டோம்.

பொம்மைகள் நமது பொழுதுபோக்கிற்கானவை. நாம் வைத்திருப்பதன் ஒரே நோக்கம்: அவைகளைப் பயன்படுத்த.

நாம் வசிக்கின்ற நமது கனவு இல்லம் முதல் நாம் வைத்திருக்கின்ற செல்ஃபோன் வரை, நாம் அணிகின்ற ஆடைகள் முதல் கையில் கட்டுகின்ற டைட்டன் வரை அனைத்தும் இருப்பவை நமது வாழ்வை சுகமாக்குவதற்காக. சுமையாக்குவதற்காக அல்ல.

நாம் வைத்திருக்கின்ற அனைத்தையும் விட நாம் மேலானவர்கள்.

நாம் உரிமையாக்கி வைத்துள்ள அனைத்தையும் விட நாம் அதிக மதிப்பு பெற்றவர்கள்.

நமது வாழ்க்கைக்குள் வருபவைகளைவிட நாம் அதிக முக்கியத்துவம் பெற்றவர்கள்.

பொம்மைகள் பொம்மைகள்தாம். பொம்மைகளை வாங்கி பயன்படுத்தலாம். இன்னும் அதிக பொம்மைகள் வாங்கினாலும் அவைகளை வைக்க வேண்டிய இடத்தில் வைப்போம். அவைகள் நமது பயன்பாட்டிற்கு மட்டும்தான் உள்ளன. அவை நமது சுகத்திற்காக மட்டும்தான்.

இனியும் நமது விலைமதிப்பற்ற கண்ணீர்த் துளிகளை அவைகளை வீணாக்க வேண்டாம், அவை எவ்வளவு பெரியவையானாலும்!

┈❀🌿🀼󟽀┈❀🌿🌺🌿❀┈❀🌿🌺🌿❀┈

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்
நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்…

முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!

இந்த நாள் இனிய நாளாகட்டும்

வாழ்க 🙌 வளமுடன்

அன்பே🔥சிவம்

🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋🌴🎋l