பணத்தை கவர்ந்திழுக்க உதவும் 5 வழிகள்

பணத்தை கவர்ந்திழுக்க உதவும் 5 வழிகள்

1.Pay with right feeling
நீங்கள் ஒருவருக்கு பணம் கொடுக்கும்போது அவர் நன்றாக இருக்க வேண்டும் மற்றும் அவருடைய தொழில் மென்மேலும் வளர வேண்டும் என்றும். நான் கொடுக்கின்ற இந்த பணம் எனக்கு பல மடங்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

2.Always pay in advance
நீங்கள் உங்களுடைய குழந்தைகளின் பள்ளிக்கட்டணம், தொலைபேசி கட்டணம், மின்சார கட்டணம், வீட்டு வாடகை, வங்கி கடன், gas bill மற்றும் இதர மாத செலவுகளை ஒரு நாள் முன்கூட்டியே செலுத்த வேண்டும். அதை செலுத்திய பிறகு அந்த ரசீது பின்புறம் இந்த கட்டணம் செலுத்தப்பட்டதற்கு நன்றி என்று எழுதலாம்.

3.Always pay extra
நீங்கள் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கும் போது அல்லது நடைபாதை வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கும் போது அவர்கள் சொன்ன விலையை விட கொஞ்சம் கூடுதலான பணத்தை கொடுங்கள். நினைத்து பாருங்கள் காய்கறி பழங்கள் விளைவித்தது அதை பராமரித்து அதை கஷ்டப்பட்டு கொண்டு வந்து உங்கள் கைகளில் கொடுக்கிறார்கள். அதை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஒரு 20 ரூபாய்க்கு வாங்குவதற்கு பேரம் பேசுகிறோம். அவர்களுடைய உழைப்புக்கு நன்றி சொல்லி கூடுதலாக பணத்தை கொடுங்கள்.

  1. Pay with blessings
    நீங்கள் வாங்கும் விலையுயர்ந்த பொருட்கள் அல்லது ஆடம்பர உணவகத்தில் சாப்பிட்டு முடித்தவுடன் அதற்கான தொகையை செலுத்தும் போது அல்லது நீங்கள் ஒரு ஆடம்பரமான கார் அல்லது ஆடம்பரமான வீட்டை பார்க்கும் போது மனதார அவர்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் மற்றும் அவர்கள் இன்னொரு ஆடம்பரமான கார் அல்லது ஆடம்பரமான வீட்டை வாங்க வேண்டும் என்று வாழ்த்த வேண்டும். அது நீங்கள் முன்னேற வேண்டும் என்பதற்கான மாயாஜால சமிக்ஞைகள்.
  2. Pay with greatful
    நீங்கள் ஒருவருக்கு பணம் செலுத்தும் போது அவர்களுடைய சேவையை பாராட்ட வேண்டும். ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் மிகச்சிறந்த சேவைக்கு நன்றி சொல்ல வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வொரு முறையும் நீங்கள் செலவு செய்யும் போது உங்களுடைய மாயாஜால பணத்தை எடுத்து தொட்டு பார்த்து
“வாழ்நாள் முழுவதும் எனக்கு கிடைக்கப்பெற்ற பணத்திற்கு நன்றி ” என்று ஆத்மார்த்தமாக கூற வேண்டும்.

வாழ்க வளமுடன்
வளர்க செழிப்புடன்

Leave a comment